டில்லி:

பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஒரு மாத காலம் பரோல் வழங்கியது. பின்னர், மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்பட்டது. பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளன் மீண்டும் சிறைக்குத் திருப்பினார்.

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளன் விடுவிக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து இரு வாரங்களில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘ ராஜிவ் கொலை வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிபிஐ தலைமையிலான பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கையை பேரறிவாளனுக்கு வழங்கலாம். இதை பார்வையிட்ட பின்னர் சிபிஐ வசம் ஒப்படைத்து விட வேண்டும். நகல் எடுக்கக் கூடாது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பாக விரிவான மனுவினை விரைவாக தாக்கல் செய்து வழக்கை முடிக்கலாம். அல்லது விசாரணையை மீண்டும் முதலிலிருந்து நடத்தச் செய்யலாம். அதனால் தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுவிக்க முடியாது’’ என்றனர்.