நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் இருந்து பிரதமரின் படத்தை நீக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Must read

 

உச்ச நீதிமன்ற இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து புதிதாக சர்ச்சை எழுந்துள்ளது.

உச்சநீதிமன்ற கணினி தகவல்களை கையாளும் இந்திய நிறுவனமான தேசிய தகவல் மையம் அதன் இ-மெயில் பதிவுகளில் பிரதமரின் படத்தை புதிதாக சேர்த்திருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் நேற்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதுகுறித்து தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பியுள்ள உத்தரவில் உச்சநீதிமன்ற படத்தைத் தவிர நீதிமன்றத்துக்கு சம்பந்தம் இல்லாத நபர்களின் புகைப்படத்தையோ, தகவல்களையோ உச்சநீதிமன்ற இ-மெயில் தகவல்களில் பதிவிடுவது முறையானதல்ல, அதனால் இதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சஷிதரூர் “உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது, இதேபோல் தடுப்பூசி சான்றிதழிலும் பிரதமரின் படத்தை நீக்க உத்தரவிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article