டெல்லி:

ம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டம்  370ஐ ரத்து செய்ததை  எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி பாப்டே அமைத்து உள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளும ன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த அரசியல் சட்டப்பிரிவு 370 ஆகஸ்டு மாதம் 5ந்தேதி (ஆகஸ்டு 5ந்தேதி, 2019) ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இக்கட்சியின் நிர்வாகிகள் முகமத் அக்பர் லோன், ஹஸ்நயின் மசூதி ஆகியோர், மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அரசியல் சட்டப்பிரிவு 370 தொடர்பாக குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதமானது என்று அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதுபோல,  டெல்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில், ‘‘காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்திருப்பது சட்டவிரோதமானது. அம்மாநில சட்டசபையில் ஆலோசிக்கப்படாமல், இந்த பிரிவு நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதிகள் என் வி ரமணா, எஸ் கே கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பி ஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அமர்வு  370 வது பிரிவை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவின் சட்டபூர்வமான தன்மையை ஆராய ஆரம்பிக்க உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட  அமர்வை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாப்டே அமைத்துள்ளார்.