துணை நடிகை படுகொலை: காதலனுடன் கைதான தோழி பரபரப்பு வாக்குமூலம்

Must read


சென்னை சாலிகிராமத்தில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சினிமா துணை நடிகை ஜெயா படுகொலை செய்யப்பட்டார். இதன் அடிப்படையில் சாலிகிராமம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடத்தப்பட்டு வருகின்றது.
துணை நடிகை கொலையில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க போலிஸ் அவர் தங்கியிருந்த வீட்டின் சிசிடிவி கேமராவை சோதித்தனர் அதில் ஒரு ஆட்டோவில் ஒரு ஆணும் பெண்ணும் கொலை செய்யப்பட்ட ஜெயாவின் வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் சென்றது பதிவாகியுள்ளது.
அதன்பின் அந்த ஆட்டோவின் நம்பரை வைத்து ஆட்டோ டிரைவர் சிராஜுதினை பிடித்து விசாரித்துள்ளனர் அதில் தனது காதலியும், துணை நடிகையுமான அசினாவுடன் சேர்ந்து ஜெயாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் அதன்பின் இருவரையும் போலிஸ் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அசினா கூறியதாவது :-
ஜெயா என்னுடைய நெருங்கிய தோழி தான் எங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் நாங்கள் சில ஆண் நண்ப‌ர்களுடன் ஜெயா வீட்டில் சந்தோஷமாக இருப்போம் அதில் வரும் பணத்தை வைத்து நாங்கள் காலத்தை கழித்து வந்தோம்.
நான் சில நண்பர்களுடன் அவளின் வீட்டில் இருப்பதால் அவள் என்னிடம் பணம் கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் இதனால் நான் அவளின் வீட்டில் உள்ள பணம் நகை ஆகியவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோக்காரர் சிராஜுதினை கூட்டணி சேர்த்துக் கொண்டேன்.
ஜெயா வீட்டிற்கு பல ஆண்கள் வந்து செல்வதால் நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்துவிட்டால் எங்கள் மீது சந்தேகம் வராது என்று கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஜெயா வீட்டிற்குச் சென்று குடித்துவிட்டு, வீட்டில் இருந்து பணம், நகையை எடுத்துச் செல்ல முயன்றபோது, ஜெயா எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவளது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

More articles

Latest article