ஜெயிலர் பட ரிலீசை தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் சென்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூர் சென்றுள்ள அவர் இன்று காலை சாம்ராஜ்பேட்டை சீதாபதி அக்ரஹாராவில் உள்ள ராகவேந்திரா சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

அங்கிருந்து ஜெயா நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்துக்கு சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்த பி.எம்.டி.சி. ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

நடிக்க வருவதற்கு முன்பு நடத்துனராக அந்த பணிமனையில் தான் பணிபுரிந்த அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரஜினிகாந்த்தின் திடீர் வருகையால் திகைத்துப் போன ஊழியர்கள் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டனர். பின்னர் ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.