உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது .

திரைப்பட வெளியீடு, விருது நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்தும் ஊரடங்கு உத்தரவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா உருவான சீனாவில் அதன் தாக்கம் தற்போது குறைந்து வருவதால் அங்கு மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இதனைக் தொடர்ந்து ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘சூப்பர் 30’ படம் சீனாவில் ரிலீஸ் ஆகத் தயாராகி வருகிறது.