ஐ.பி.எல் போட்டியின் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, முதல் முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்களான முகமது நபி மற்றும் ரஷீத் கான் அர்மாவ் ஆகியோரை இன்று ஏலம் எடுத்துள்ளது. இதில் நபி ரூ. 30 லட்சத்துக்கும், கடும் போட்டிக்கு இடையே ரஷீத் கானை ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.


ஆப்கானிஸ்தான் அணியில் நபி தற்போது முக்கிய பங்காற்றி வருகிறார். 2010ம் ஆண்டு டி 20 போட்டியில் 56 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 52 டுவன்டி:டுவன்டி போட்டிகளில் 6.96 என்ற அடிப்படையில் அவர் உள்ளார்.

அதே சமயம் ரஷீத் கானை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் ஆரம்ப விலையாக ரூ. 50 லட்சம் கேட்டிருந்தது. இடது கை பந்துவீச்சாளரான இவர் சர்வதேச 21 டுவன்டி:டுவன்டி போட்டிகளில் 6.14 என்ற நிலையில் உள்ளார். இவருக்கு வயது 18. நபிக்கு தற்போது 32 வயதாகிறது என்பது குறிப்படத்தக்கது.