ஐ.பி.எல்.: சேலம் வீரர் நடராஜன் 3 கோடிக்கு ஏலம்!

Must read

பெங்களூரு:

த்தாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த வீரரட் நடராஜனை, மூன்று கோடி ரூபாய்க்கு “பஞ்சாப் கிங்கஸ் லெவன்” அணி ஏலத்துக்கு எடுத்துள்ளது.

நடராஜன்

பத்தாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் மாதம்  5ம் தேதி  முதல் மே மாதம் 21ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற  உள்ளது.

இந்த போட்டியில் விளையாடு வீரர்களை தேர்வு செய்யும் ஏலம், பெங்களூருவில் நடைபெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்த 43 பேர்  உட்பட ,  139 வீரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் நமது தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த

தங்கராசு டி. நடராஜன் ஆவார். இவரை தங்கள் அணிக்கு இழுக்கு, ரூ. 10 லட்சத்தில் ஏலத்தைத் துவங்கினர் அணி நிர்வாகிகள். இறுதியில் ரூ. 3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.

யார் இந்த நடராஜன்?

நடராஜன், சேலம் மாநகரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.  சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார் நடராஜன்.

கிரிக்கெட்டின் மீதான தீவிர ஈடுபாட்டின் காரணமாக, முதன்முதலாக 2010-11-ம் ஆண்டில் நடைபெற்ற பிஎஸ்என்எல் – தமிழ்நாட்டி கிரிக்கெட் அசோசியேசன் நடத்திய லீக் போட்டியில் பங்குபெற்றார். அதில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு, ரஞ்சி டிராபி அணியில் இடம் பிடித்தார்.

ரஞ்சி டிராபியில் அவர் ஆடிய 9 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக பந்துவீச்சில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது முதல் டி20 ஆட்டத்திலேயே அவரது திறன் வெளிப்பட்டது. கர்நாடகத்துக்கு எதிரான அவரது பந்துவீசு மரணஅடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

களத்தில்..

25 வயதேயான நடராஜன் இடதுகை பந்துவீச்சாளர். தனது தனித்திறமையால் முதல்நிலை ஆட்டக்காரராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.

இவரது தனிச்சிறப்பு.. ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் யாக்கராக வீசுபவர்.

இதுவரை ஏலம் எடுக்கப்பட்ட சில வீரர்கள்..

இந்த முறை, மொத்தம் 357 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவர்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

“யாக்கர்” நடராஜன்

ங்கித் சவுத்திரி ரூ. 10 லட்சத்தில் துவங்கி, பெங்களூரூ அணிக்கு ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ப்கானிஸ்தான் வீரர் முஹமது நபியை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. இவர்தான், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் முதல் ஆப்கானிஸ்தான் வீரர்.

ர்பான் பதான், மார்ட்டின் குப்தில், ராஸ் டெய்லர் ஆகியோர் விலை போகவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article