ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத்

Must read

அபுதாபி: 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களே எடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும், டேனியல் கிறிஸ்டியன் 2 விக்கெடும், கார்டன் மற்றும் சஹல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் நாளை இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் – பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளும், ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடக்கு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோத உள்ளன.   

More articles

Latest article