இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட  நிலநடுக்க காரணமாக  20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

இன்று அதிகாலை 3.30 மணியளவில்  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஹர்னாய் நகரத்துக்கு வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக,  வீடுகள் கட்டிங்கள் குலுங்கின. சில கட்டிடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்து. மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்துக்கள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்துளளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்  மாகாண அமைச்சர் மிர் ஜியா உல்லா லங்காவ் கூறியுள்ளார்.

மேலும் மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அந்நாட்டு பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்து உள்ளனர்.