‘மதுர ராஜா’வில் சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் மம்முட்டி! வைரலாகும் போட்டோ

Must read

லையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும்  ’மதுர ராஜா’ என்ற திரைப்படத்தில் அவருடன் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். படத்தில் இருவரும் இணைந்து ஆடும் குத்தாட்டம் போடும் போட்டோ பெரும் வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மதுர ராஜா’.  கடந்த 2010ல் பிரித்திவி ராஜுடன், இணைந்து நடித்த ‘போக்கிராஜா’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மதுர ராஜா’ உருவாகிறது.  இந்தப் படத்தில்  நடிகர் ஜெய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன்,   அக்கா, இக்கா என்ற  பாடலுக்கு குத்தாட்டமும் ஆடியுள்ளார். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டைத் தொடர்ந்து தற்போது தென்னிந்தியப் படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் சன்னி லியோன்,  தமிழில் விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘அயோக்யா’ என்ற படத்திலலும் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் சரித்திர நாயகியாக சன்னி லியோன் நடிக்கும் ’வீரமாதேவி’ திரைப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது. மற்றொரு மலையாளப் படமான ‘ரங்கீலா’விலும் முக்கியக் கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது குத்தாட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், பெண்களி டையே கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது.

இதுகுறித்து  நடிகர் அஜு வர்கீஸ் தனது பேஸ்ஸ்புக் தளத்தில் பதிவிட்டு இருந்ததாகவும்,. ஆனால், அதற்கு பெண்களிடம் இருந்த கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அதை அகற்ற வேண்டியதாகி விட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.

மதுரா ராஜா படத்தில் மம்முட்டியுடன், அஜு வர்கீஸ், சித்திக், அன்னா ராஜன், அனுஸ்ரீ, நெடுமூடி வேணு, விஜயராகவன், சலிம்குமார், தர்மஜன் போல்காட்டி, பாலா பிஜுகுட்டன், மணிகுட்டன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

More articles

Latest article