இந்தியில் இரு படங்களில் நடித்துள்ள கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். அவருக்கு ஜோடியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பட்டா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.