நடிகை சன்னி லியோன் பி.ஏ. பட்டப் படிப்பை படிக்கப் போவதாக கல்லூரியில் ஒட்டப்பட்ட சேர்க்கை பட்டியல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கொல்கத்தாவின் அசுடோஷ் கல்லூரியில் வியாழக் கிழமை ஒட்டப்பட்ட அந்த சேர்க்கை பட்டியலில், சன்னி லியோன் பெயர் முதலிடத்தை பிடித்து இருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுவும் பன்னிரண்டாம் வகுப்பில் 4 படங்களில் நூற்றுக்கு நூறு பெற்று அந்த இடத்தை பிடித்துள்ளார்

யாரோ வேண்டுமென்றே இப்படியொரு காரியத்தை செய்துள்ளனர் என தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், இது தொடர்பான விசாரனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது.