பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம்.

ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார் .

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 13-ஆம் தேதி மறுபடியும் தொடங்கியதை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உறுதி செய்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 40’ என அழைத்து வருகிறது படக்குழு.

சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதை வீடியோ டீஸர் மூலம் அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். அண்ணாத்த படம் பர்ஸ்ட் லுக் அறிவிப்புக்காக ரஜினி முதுகு காட்டியபடி நிற்கும் புகைப்படத்துடன் தனி போஸ்டரை சன் பிக்சர்ஸ் வடிவமைத்திருந்தது. அதேபோல் சூர்யா, ரஜினி ஸ்டைலில் முதுகு காட்டியபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இன்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியாவதை மறுபடி உறுதி செய்துள்ளது.

ஒரே நேரத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 வது படம் ஆகியவற்றை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.