பிரியா வாசுதேவ் மணி ஐயர் என்கிற பிரியாமணி 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ’கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இருப்பினும் 2007 ஆம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் வெளியான ’பருத்திவீரன்’ படத்தின் மூலம் பிரபலமானார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.

இந்நிலையில் முஸ்தபா ராஜ் முதல் மனைவி ஆயிஷா தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் முஸ்தபா ராஜ் நடிகை பிரியாமணியை திருமணம் செய்து கொண்டதாக கிரிமினல் வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஆயிஷா -முஸ்தபா ராஜ் இருவருக்கும் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முஸ்தபா ராஜ் திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே நானும் ஆயிஷாவும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறோம். 2013 ஆம் ஆண்டில் இருவரும் முறையாக விவாகரத்து பெற்று விட்டோம். அதன் பின்னர்தான் 2014 ஆம் ஆண்டில் நான் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் இத்தனை காலமும் அமைதியாக இருந்த ஆயிசா இப்போது ஏன் என் மீது வழக்கு தொடுக்கிறார். என்னிடமிருந்து மேலும் பணம் பறிப்பதற்காகத் தான் திட்டமிட்டு இப்படி ஒன்றை செய்து வருகிறார் என முஸ்தபா ராஜ் கூறியுள்ளார்.