கோவை: கோடை விடுமுறை மற்றும் ஊட்டி சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவதால், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிவரை வரும்  16ந்தேதி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளதால், கோடை விடுமுறையை குளுகுளுவென கொண்டாட, ஏராளமானோர் ஊட்டி, கொடைக்கானல், ஏற்பாடு, டாப் சிலிப் என கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணமாகத் தொடங்கி உள்ளனர். ஊட்டியில் சீசன் தொடங்கி உள்ளதால்,  நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க  தினசரி அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊட்டி மலை போக்குவரத்து இப்போதே நெரிசலாக காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை 16ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,

வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை 16-ம் தேதி முதல் ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்படுவதாகவும்,

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதி.

மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும்  இதர வாகனங்கள் குன்னூர் வழியாக அனுமதி.

ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதி

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…