டெல்லி: தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் தமிழ் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோ‌ஷங்களையும் தரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார்.

சித்திரை 1ந்தேதியான இன்று தமிழ்ப்புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள கோவில்களுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான தெய்வங்களை வணங்கி வாழ்த்து பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்.

இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.

வடமாநிலங்களில் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி அவர்களுக்கும் மகாவீர்ஜெயந்தி வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்.