திருவாரூர் : கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான். இன்று அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குருபகவான் இடம்பெயர்த்துள்ளார். குருபெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிப்பாடு நடந்து வருகிறது.

பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் (ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) ஆலங்குடியில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் ருபகவானுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு, ஆலங்குடி,தென் திட்டை குருபகவான் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முழுவதும் விசேஷ பூஜைகள் நடைபெற்கிறது.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனையும் நடக்கிறது. குருபெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல தென் திட்டை வஷிஷ்டேஸ்வரர் ஆலயத்திலும் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஹரிஹரன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

சுபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள்

https://www.facebook.com/watch/?v=396468532010120&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing