சென்னை: கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரையை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு, அரசின் கூர்நோக்கு இல்லங்களில் ஏற்படும் மரணங்கள் மற்றும் அசவுகரியங்கள் குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ உயிரிழந்ததை தொடர்ந்து கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான குழு ஆய்வு செய்து வந்த நிலையில், ஆய்வு அறிக்கையை நீதிபதி சந்துரு முதலமைச்சர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். அத்துடன்,  கூர்நோக்கு இல்லங்களில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் இப்படித்தான் பரிந்துரைகளையும் அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கூர்நோக்கு இல்லங்களின் சேர்க்கை கண்காணிப்பாளர் அல்லது உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் செய்யப்பட வேண்டும்.

கூர்நோக்கு இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்குவதற்கு போதுமான ஆடைகளை வழங்க வேண்டும்.

சிறிய, தீவிரமான அல்லது கொடூரமான குற்றங்களின் அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்பட வேண்டும்.

கூர்நோக்கு இல்லங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் வயதின் அடிப்படையில் குழுக்களாக பிரிக்க வேண்டும்.

குறிப்பாக 13 முதல் 16 வயது வரை ஒரு குழுவாகவும், 16 முதல் 18 வயது வரை மற்றொரு குழுவாகவும் கண்டிப்பாக பிரிக்க வேண்டும்

உள்பட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.