சென்னை,
சென்னையில் நேற்று இரவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக,சென்ட்ரல் – ஆவடி இடையே இருமார்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல புறநகர் ரெயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அறிவித்து உள்ளது.
ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் – ஆவடி இடையே இருமார்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், நெல்லூர் – சூரப்பேட்டை, சூரப்பேட்டை – சென்னை சென்ட்ரல், திருப்பதி – நெல்லூர் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அரக்கோணம் – சென்னை சென்ட்ரல், அரக்கோணம் – திருப்பதி இடையே செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விபத்து நடைபெற்ற பகுதியில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், நாளை முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என ரெயில்வே தெரிவித்து உள்ளது.
புறநகர்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.