ஓகி புயல்: மீட்கப்படாத தமிழக மீனவர்கள் எத்தனை பேர்? மத்தியஅரசு தகவல்

Must read

டில்லி,

டந்த மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது.

அந்த நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான பேரில் 500க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களின் கதி என்ன என்றும் தெரியவில்லை.

இந்நிலையில், ஓகி புயல் காரணமாக கடலுக்கு சென்ற மீனவர்களில்,  400 தமிழக மீனவர்கள் உள்பட 661 பேர் இன்னும் மீட்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

ஓகி புயலின் பாதிப்புக்கு வங்க கடலோர பகுதிகளான கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகளின் சரியான அறிவிப்பு இல்லாததால்,   இந்தப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி காணாமல் போயினர்.

மீனவர்களை  மீட்கும் பணியில், மாநில அரசுகளுடன் இணைந்து, கடலோரக் காவல்படையும், கடற்படையும் ஈடுபட்டன. எனினும் மீனவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுக்கவில்லை என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் போனவர்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் பற்றி விவரங்களை மத்திய பாதுகாப்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ”ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் காணாமல் போன மீனவர்களை மீட்க விரிவான தேடுதல் பணி நடந்தது. கடலோர காவல்படை மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன் பயனாக,  தமிழகத்தைச் சேர்ந்த 453 மீனவர்களும், கேரளாவைச் சேர்ந்த 352 மீனவர்களும், லட்சத்தீவைச் சேர்ந்த 30 மீனவர்களும் மீட்கப்பட்டனர் என்று கூறி உள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மீனவளத்துறை கொடுத்துள்ள  தகவலின் அடிப்படையில் டிசம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 400 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும்,

கேரளாவைச் சேர்ந்த 261 மீனவர்களும்  காணாமல் போயுள்ளனர்.

அதேசமயம் லட்சத்தீவைச் சேர்ந்த மீனவர்கள் வேறு மீனவர்கள் யாரும் காணாமல் போகவில்லை” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article