நாதுராமின் கூட்டாளிகள் 3 பேரை ராஜஸ்தான் காவல்துறை கைது செய்தது!

Must read

ஜெய்ப்பூர் :

மிழக காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் மூவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை பிடிக்கச் சென்ற போது சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பெரியபாண்டியனை குற்றவாளிகள் சுட்டதாகவும், தவறுதலாக சக காவலர்களே சுட்டுவிட்டனர் என்றும் இருவேறு தகவல்கள் உலவுகின்றன.

இந்நிலையில் நாதுராமின் கூட்டாளிகளான சோட்டு ராம்ஜெத்,நாதுராம்ஜெத், பாபுலால் உள்ளிட்ட மூவரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாதுராம்தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். நாதுராம் பதுங்கி இருக்கும் இடம் குறித்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே கொள்ளையன் நாதுராமின் புகைப்படம் ராஜஸ்தானில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு அவனை தேடும் பணியை ராஜஸ்தான் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

More articles

Latest article