சென்னை: தமிழகத்தில் டிசம்பர் வரை ரேஷனில் மானிய விலையில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பதிலளித்து பேசி வருகின்றனர்.
உணவு மற்றும் நுகர்வோர் தொடர்பான விவாத்தில் பேசிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி,
ரேஷனில் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் டிசம்பர் வரை தரப்படும் என சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் ஒன்றுக்கு 1 கிலோ துவரம் பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் விநியோகம் செய்யப்படும்.
மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
மே மாதம் முதல் தற்போது வரை 3,38,512 பேருக்க புதிதாக ய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.