அரசியலுக்கு தகுதியே இல்லாதவர் ரஜினிகாந்த்!: சுப்பிரமண்ய சுவாமி

“நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியே இல்லாதவர்” என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமண்யன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், “நடிகர் ரஜினிகாந்த் எதிலும் நிலையான எண்ணம் கொண்டவர் அல்ல. அவருக்கு தமிழக அரசியலில் எதிர்காலமும் இல்லை

தமிழக அரசியலில் ரஜினிக்கு என்று எந்த பங்களிப்பும் கிடையாது. ரஜினியால், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எந்தவொரு சவாலும் வராது.

தமிழக வாக்காளர்கள் தெளிவானவர்கள். இளைய தலைமுறை வாக்காளர்கள் தேசிய சிந்தனை கொண்டவர்களாக விளங்குகிறார்கள்” என்று சுப்பிரமண்யம் சுவாமி தெரிவித்துள்ளார்.