டில்லி:

தாஜ்மகாலின் உரிமை தொடர்புடைய ஆவனங்களை ஒப்படையுங்கள் என்று  வக்பு வாரியத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2005ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் தாஜ்மகாலைத் தங்களுடைய சொத்து எனப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி 2010ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாஜ்மகாலின் உரிமையை ஷாஜகான் வக்பு வாரியத்துக்கு எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து ஷாஜகான் எழுதிக்கொடுத்த உரிமைப் பட்டயத்தை நீதிமன்றத்துக்குக் காட்ட வேண்டும் என வக்பு வாரியத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.