டில்லி

புகழ்பெற்ற சமூக வலைதளமான முகநூலுக்கு போட்டியாக ஹலோ என்னும் புதிய செயலி இன்று அறிமுகமாகி உள்ளது.

உலகில் முதன் முதலில் பரவலாக இருந்த சமூக வலை தளம் கூகுளின் ஆர்குட்.    இந்த வலை தளம் பலராலும் உபயோகப்படுத்தப் பட்டு வந்தது.   முகநூல் வந்த பிறகு இந்த புகழ் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது.   கடந்த 2014ஆம் வருடம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் ஆர்குட் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.    முகநூல் சமூக வலை தளங்களில் போட்டியின்றி திகழ்ந்தது.

முகநூலுக்கு போட்டியாக தற்போது ஆர்குட் ‘ஹலோ’ என்னும் புதிய செயலியை அறிமுகப் படுத்தி உள்ளது.   இது குறித்து, “இந்த செயலி நிஜ உலகத் தொடர்புகளுக்காக உருவாக்கப்பட்டது.   இது லைக்குகளுக்காக அல்ல, அன்புக்காக உருவாக்கப்பட்டது.   மீண்டும் இதன் மூலம் ஹலோ சொல்வதில் மகிழ்கிறோம்.

இப்போதுள்ள சமூக ஊடகங்கள் ஒருவர் நேரில் பழகுவதற்கும், சமூக ஊடகங்கள் மூலம் பழகுவதற்கும் வித்தியாசம் இருப்பது போல் ஆக்கி விடுகின்றன.   ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருவரை ஒருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள உதவ வேண்டும்.   அதற்காகவே ஹலோ உருவாக்கப்பட்டுள்ளது” என  தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஹலோ செயலி, ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.