டில்லி:

2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தொடக்கமாக  ‘கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் துவக்கப்பட உள்ளது என்று முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான வீரப்பமொய்லி கூறி உள்ளார்.

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் மே 12ந்தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கட்சி அறிக்கை வரைவுக் கமிட்டியை தலைவர் வீரப்ப மொய்லி, கர்நாடகாவில் காங்கிரஸ் செய்யும் தேர்தல் பிரச்சாரம், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கும்  தொடக்கமாக இருக்கும் என்று கூறினார்.

2019 ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் கட்சியின் கர்நாடகா தேர்தல் அறிக்கையில் வாக்களிக்கப்பட்ட வாக்குறுதிகளும் கொள்கைகளும் பிரதிபலிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும், அதே வேளையில், 2019ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெற்றிபெற்று பிரதம மந்திரி பதவி வகிப்பார் என்றும் கூறினார்.

நடைபெற உள்ள  கர்நாடகா தேர்தல் 2019 ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தல்களின் முன்னோடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வாக்காளர்களை வளர்த்துக் கொள்வதற்கான முக்கிய ஆயுதமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர்.

கர்நாடக தேர்தல் அறிக்கையை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையாக உருவாக்க வரைவுக் குழுவொன்றை கேட்டுக் கொண்டதன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.