சென்னை: வண்டலூர், ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னையை அடுத்துள்ள வண்டலூர், ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உதவி ஆய்வாளர்களுக்கான ஓர் ஆண்டு பயிற்சியினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.  தொடர்பாக காவலர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின் , காவல்துறையினர் உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், சூழ்நிலை காரணமாக குற்றம் செய்தவர்களை திருத்த முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். தேசத்தந்தை காந்தி சொன்னதை போல, போலீசார் மக்கள் சேவகர்களாகவும் சமூக சீர்திருத்தவாதிகளாகவும் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற சொல்லுக்கு எடுத்துக் காட்டாக செயல்பட வேண்டும் எனவும் சட்டத்தை மதிப்போருக்கு இன்முகம் காட்டியும், மீறுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கியும் செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.