மதுரை:
ன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார் எனவும் தான் மாநில உரிமையை பறிக்கவே வந்துள்ளேன் என ஆளுநர் கூறுவது போல் உள்ளதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி என்னும் அரக்கனால் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளனர். பல்லாயிரம் பேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். பலர் நடைபிணமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடுப்பதற்காக கடந்த ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் கொண்டு வருவதற்கு சரியான தரவுகள் கூறப்படவில்லை என்று கூறி அந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இதுபோன்ற சட்டங்கள் வலுவான சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.