ள்ளி திடலில்  நடன அழகிகள் நடனம் ஆடியதால், மொட்டை மாடியில் வைத்து மாணவர்கள் தேர்வு நடத்தப்பட்ட சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் திகாம் நகரில் அரசுப் பள்ளி ஒன்று  இயங்கி வருகிறது. வருடம்தோறும் இந்தப் பள்ளியில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரால், கலைநிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.  இந்த வருட  கலைநிகழ்ச்சி நேற்று அங்கு நடந்தது.

ஆனால்,   இதே நாளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

பள்ளி திடலில் கலைநிகழ்ச்சியை முன்னிட்டு வண்ணமிகு அலங்காரங்கள், கலர் கலராக பலூன்கள் என்று கட்டப்பட்டிருந்தது. நடன அழகிகளின் குத்தாட்டம் களைகட்டியது. இதைப் பார்த்து ரசித்த கூட்டத்தினர் விசல் அடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் கூட்டத்தினரில் கூச்சல்களை சகித்துக்கொண்டு மாணவர்கள், பள்ளி மொட்டை மாடியில் தேர்வு எழுதினர்.  இந்த சம்பவம் ம.பி. மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.