சென்னை:  நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை நந்தனத்தில் உள்ளது அரசு ஒய்.எம்.சி.ஏ.  கல்லூரி. இங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் உடற்பயிற்சி கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை  அவ்வப்போது மாணாவர்கள் போராடுவது வாடிக்கையாகி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு  உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் கல்வி மாண மாணவிக,ள கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியதுடன், பயிற்சியாளர்கள் தரக்குறைவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் மாணாக்கர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்-  நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு பயிற்சி கல்லூரியில் அடிப்படை வசதி, கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது இல்லை என்றும், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை, எந்தவொரு கோரிக்கையையும் அரசு கண்டுகொள்வது இல்லை. அதனால் தங்களது கோரிக்கை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.