சென்னை: தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 20ந்தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆன்லைன் தேர்வை வலியுறுத்தி மாணாக்கர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதை ஏற்க மறுத்து, நேரடி தேர்வுதான் நடைபெறும் என தமிழகஅரசு பிடிவாதமாக கூறி வந்தது. இந்த நிலையில், தற்போது மாணாக்கர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் கல்வி நிறுவனங்கள் ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், கல்லூரி மாணாக்கர்களுக்கு ஜனவரி 18ந்தேதிக்கு மேல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
பொங்கலுக்கு பிறகுதான் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்! அமைச்சர் பொன்முடி
மேலும், ஜூன் அல்லது ஜூலையில் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதியாண்டு தேர்வு கண்டிப்பாக நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறித்து 29ம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்கப்படும். கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி மாணவர்களுக்கு இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது! உயர்கல்வித்துறை அதிரடி