சென்னை: தமிழகத்தில் கல்வி நிலையங்கள் திறக்கும் வரை மாணவர்களுக்கு இலவச டேட்டா வேண்டும் என தமிழகஅரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதால், ஆன்லைன் மூலம் போதிக்கப்படும் கல்வியை அறிந்துகொள்ள, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு கடந்த அதிமுக அரசு, தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவம் லட்சக்கணக்கான ஏழை  மாணவர்கள் பயனடைந்தனர். இந்த திட்டம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆனால் புதிய கல்வி ஆண்டு தொடங்கி உள்ளதால், மீண்டும்ஆன்லைன் வழக்குகள் தொடங்கி உள்ளன. ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் இலவச 2 ஜிபி டேட்டா திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து க்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

=