சென்னை: 
நீட் தேர்வு குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல்  சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றது.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்படும் நீட் தேர்வை நாடுமுழுவதும் 16.14 லட்சம் பேர் எழுதினர். முதன்முறையாகத் தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் 70 ஆயிரம் மாணவிகள் 40 ஆயிரம் மாணவர்கள் என 1.10லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. புதுச்சேரியில் 14 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
நீட் தேர்வு குறித்துத் தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல்  சற்று கடினமாக இருந்ததாக, உயிரியல் மற்றும் கெமிஸ்டரி பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.