Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

அரசு பள்ளிகளில் ஆகஸ்டு 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Jul 24, 2020

சென்னை:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை  அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கி உள்ளது. ஆனால், அரசு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா குறைவதைத் தொடர்ந்தே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். அப்போது மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும். ஆனால், அந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாதது பெற்றோர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்டு  3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை   அறிவித்துள்ளது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை ஊரடங்கு முடிந்தவுடன் 3.8.2020 முதல் நடைபெறும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்ப படிவமும் அன்றே வழங்கப்படும்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும்.
கொரோனா காலத்தில் எந்த இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post navigation

பள்ளிகளில் 1முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவு
போலி இ-மெயில் விவகாரம்: மாரிதாஸ்மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar
உலகம்

மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு

April 24, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer