கலைஅறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை… தர வரிசை பட்டியல் இன்று வெளியீடு

Must read

சென்னை: கொரோனா காரணமாக, ஆன்லைன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. மேலும், இளநிலை படிப்புகளுக்கு கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்யாத மாணவா்களுக்கு அவகாசமும் வழங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித்துறை  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா் சோக்கைக்கு ஜூலை 20 முதல் 31-ஆம் தேதி வரை இணையவழியில் மொத்தம் 3,16,795 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 2 லட்சத்து 18,810 போ கட்டணம் செலுத்தினா். விண்ணப்பித்தவா்களில் ஒரு லட்சத்து 35,832 மாணவா்கள் மட்டுமே தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.

அவகாசம் நீட்டிப்பு: தற்போது இணையத்தில் விண்ணப்பப்பதிவு செய்து கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றாதவா்கள், தங்கள் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வழி செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டு, தோவான மாணவா்களின் சோக்கை விவரம், மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவா்கள், கல்லூரி இணையதளத்தில் கட்டணம் செலுத்தி சோக்கையை உறுதி செய்து கொள்ளலாம்.

கல்லூரிகளில் அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்க, அதே மாவட்டத்தில் உள்ள மாணவா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் நேரில் சென்று ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். வெளி மாவட்டத்தில் இருப்பவா்கள், மாவட்ட சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ் களைச் சமா்ப்பித்து ஒப்புகைச் சீட்டு பெறலாம்.

மாணவா் சோக்கை தொடா்பாக இதுவரை 4,999 மாணவா்கள் நேரடியாகவும், 6,725 மாணவா்கள் தொலைபேசி மூலமாகவும், 2,990 மாணவா்கள் மின்னஞ்சல் மூலமாகவும் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றுள்ளனா்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article