லக்னோ:

கருணை, மன வலிமை , அன்பு, நளினத்துடன் கூடிய அழகு ஆகியவை ஒருசேர பெற்றவர் பிரியங்கா வதேரா என்று அவரது நண்பர்களும், ஆதரவாளர்களும் பெருமையாகச் சொல்கிறார்கள்.


1991-ம் ஆண்டு தன் தந்தை ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகும் , நங்கூரம் போல் உறுதியான மன வலிமையை பிரியங்கா பெற்றிருந்தார்.

அதன்பிறகு அரசியலுக்கு வர தன் தாய் சோனியா காந்தி மறுத்த சூழலிலும், சகோதரர் ராகுல் காந்தி உயர் கல்வி கற்க வெளிநாடு சென்ற சூழலிலும், தன் தாயை மிகவும் பரிவோடு கவனித்துக் கொண்டார்.

அவரது நளினமாக இருக்க விரும்புவார். மேற்கத்திய மற்றும் புடவை போன்ற இந்திய கலாச்சார உடைகளை அணிவதில் சமமான ஆர்வம் காட்டுவார்.

தொழிலதிபர் ராபர்ட் வதேராவை திருமணம் செய்தபிறகு, தனது அரசியல் அபிலாஷைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மகள் மிராயா மற்றும் மகன் ரேகன் ஆகியோரை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

1998-ம் ஆண்டு சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரானதும், அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
தன் குடும்பத்தினரின் பாரம்பரிய தொகுதிகளான அமேதி, ரேபரலியில், உள்ளூர் சுய உதவிக் குழுக்களை செயல்படுத்தினார்.

இந்த குழுக்களின் செயல்பாடுகளை தன் சகோதரர் ராகுல் காந்தியுடன் சென்று கண்காணித்தும் வந்தார்.
குடிசை வீடுகளில் வாழும் கிராமப்புற பெண்களுடன், தரையில் அமர்ந்து கலந்துரையாடும் பிரியங்காவின் செயல் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

இவ்வாறு பிரியங்கா வதேராவைப் பற்றி அவரது நண்பர்களும் ஆதரவாளர்களும் பெருமையாக கூறுகின்றனர்.