சென்னை,

று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர்  கடந்த 25ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 61 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த்திருந்தது.

நேற்று மாலையில் சென்னை தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினருடன் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொள்வதாக அரசு ஊழியர் சங்கத்தலைவர் சுப்பிரமணி கூறியுள்ளார்.