சென்னை,

ந்தமான் அ ருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே மேக மூட்டமாகவும் விட்டுவிட்டு மழை பெய்தும் வருகிறது.

இந்நிலையில், அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வு நிலை வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கும், லட்சத்தீவுக்கும் இடையே தெற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகம் வழியாக நிலவி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.