ஆக்ரா:

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

இதில் தாஜ்மகாலின் தெற்கு நுழைவு வாயில் பகுதியில் இருந்த பழமை வாய்ந்த 12 அடி உயரம் கொண்ட தூண் திடீரென இடிந்து விழுந்தது. பிரதான வாயிலின் ஒரு பகுதியாக இருந்த இந்த தூணில் இருந்த கலசமும் உடைந்தது.

அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தொல்பொருள் துறையினர் பதிலளிக்க மறுத்துவிட்டனர். தூண் இடிந்து விழுந்தது சுற்றுலா பயணிகளை கவலை அடைய செய்துள்ளது.