காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது.

அப்போது ராகுல் காந்தி கார் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரது காரின் பின்புற கண்ணாடி சேதமடைந்ததாக கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இந்த கல்வீச்சு சம்பவத்தில் ராகுல் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்ற போதும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறினார்.