சென்னை: சென்னையில் நடைபெற்ற தனது மைத்துனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஆளுநர் பிரதமர் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமருக்கு திமுகவின் நினைப்பு தான் என்றவர், வள்ளலார் குறித்து ஒருவர் உளறி வருகிறார் என ஆளுநரையும் கடுமையாக சாடினார்.

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தனது மைத்துனரும், சென்னை ஈஎஸ்ஐ மருத்துவமனை தலைவரும்,   மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி மகன் சாரங்கராஜன் என்ற சஞ்சய்க்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கான வரவேற்பு   இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  வள்ளலாரை பற்றி ஒருவர் உளறி வருகிறார் என ஆளுநர் குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர்,  மேலும், மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவை எதிர்ப்பவர்களை சிபிஐ, ஐடி, அமலாக்க துறையை வைத்து மிரட்டுகிறார்கள், மத்தியஅரசை எதிர்த்தாலே CBI ,IT ,ED வைத்து மிரட்டல்” “கேட்டால் பிரதமருக்க்கு கோவமே வந்துவிடும்” என்றவர், பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் குடும்பத்தின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறார்கள் என்று பேசியிருக்கிறார், அவருக்கு எப்போதும் திமுக பற்றிய நினைப்புதான் என்று விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெறுகிறது.. இதே போல் இந்திய நாட்டிற்கும் ஒரு ஆட்சி தேவை பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை சனாதனத்தை மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறது பாஜக பாஜக கொள்கைகள், என்றவர், பேச்சின் இறுதியில், மணமக்களிடம்  ஒரு வேண்டுகோளை விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மணமக்களுக்கு பிறக்கும் குழந்தை களுக்கு தமிழ் பெயரை சூட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த திருமண விழாவில் முதலமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு மட்டும் சென்றிருந்தார். மற்றபடி வேறு எந்த அமைச்சரையும் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்து உட்பட சொற்பொழிவாளர்கள், இலக்கியவாதிகள், என பலரும் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்திருந்தனர்.  பெரும்பாலான அரசியர் பிரமுகர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துர்கா ஸ்டாலினின் தம்பி டாக்டர் ராஜமூர்த்தி சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் இயக்குநராக இருந்து வருகிறார்.. மேலும், இவர் பட்டிமன்ற பேச்சாளரும் கூட. ஏராளமான சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.