சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் 25 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 28ம் தேதி நடந்தது. இதில் 192 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. மேலும், ஓட்டுகளை வெளிமாநில பிரதிநிதிகள் மூலம் தான் எண்ண வேண்டும் என தேர்தல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதனால் மறு உத்தரவு வரும் வரை வாக்குகளை எண்ணக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.