சென்னை:

வேட்பு மனுவில் கைரேகை பெற்ற போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தது குறுக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி முடித்துள்ளது. சசிகலா தரப்பினர் தற்போது குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர்கள் 8 பேரிடம் விசாரணை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணை கமிஷன் தரப்பில் கூறுகையில், ‘‘ குறுக்கு விசாரணையின் போது வேட்புமனுவில் கை ரேகை பெற்ற போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சசிகலா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற பூங்குன்றனை டாக்டர் பாபு ஆபிரகாம் அழைத்துள்ளார். ரேகை பெற்ற பின் விரலில் இருந்த மையை பாலாஜி அழிக்க முயன்ற போது அதை சசிகலாவே அழித்துள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.