மாநிலங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும்! தமிழகஅரசை சாடிய பிரதமர் மோடி…

Must read

டெல்லி: மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைக்காத தமிழகஅரசை பிரதமர் மோடி குறை கூறினார்.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், அதுகுறித்து பிரதமர் மோடி இன்று மதியம் மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது உரையாற்றிய பிரதமர், கோவிட் எழுச்சியை சமாளிக்க அதே செயல்திறனுடன் ‘சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை’ குறித்து பிரதமர் மோடி வலியுறுத்ததினார்.

“பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை கடந்த நவம்பரில் மத்திய அரசு குறைத்தது.  மாநிலங்களும்  தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதை ஏற்று சில மாநிலங்கள் வரிகளை குறைத்து மக்களுக்கு பலனை கொடுத்துள்ளன. ஆனால், சில மாநிலங்கள் மக்களுக்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை.

தமிழகம் உள்பட சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த மாநிலங்கள் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கவில்லை, இது ஒரு வகையில் இந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, அண்டை மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இப்போது வாட் வரியைக் குறைத்து மக்களுக்கு நன்மைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

வரிகளைக் குறைத்த மாநிலங்கள் வருவாயில் இழப்பை சந்திப்பது இயற்கையானது என்று கூறியதுடன்,  எரிபொருள் மீதான வாட் வரி உயர்வின் போது குறைக்காத மாநிலங்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி, இந்த விஷயத்தின் நான் யாரையும் விமர்சிக்கவில்லை, ஆனால் விவாதிப்பேன் என்றவர்,  மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல் – டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும், வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், இதற்கு ஒரு உதாரணத்தை கூறுவதாக தெரிவித்தவர்,   கர்நாடக மாநிலம் வரிகளை குறைக்காமல் இருந்திருந்தால், கடந்த ஆறு மாதங்களில் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்திருக்கும். குஜராத்தும் ரூ.3500- 4000 கோடி அதிகமாக வசூலித்திருக்கும். ஆனால் அவை மக்கள் நலனின் அக்கறை கொண்டு குறைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article