டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதையடுத்து, தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கமுடியாது எனவும், புதிய சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும்  தெரிவித்தது.

பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மக்களவையில் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு சட்டம் கொண்டு வந்து தடுக்க முடியும், ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று என்று தெரிவித்து உள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் ரத்து! சென்னை உயர் நீதிமன்றம்