மியான்மரில் முதல் கிளையை திறக்கிறது ஸ்டேட் பேங்க்!

Must read

யாங்கூன்:
ந்தியாவை தலைமையிடமாக கொண்ட ஸ்டேட் பாங்க், அயல்நாடான மியான்மரில் தனது முதல் கிளையை தொடங்க உள்ளது.
மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் தனது முதல் கிளையை திறக்கவிருக்கிறது பாரத ஸ்டேட் பேங்க். இத்தகவலை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார்.

இது இவ்வங்கியின் 54வது வெளிநாட்டு கிளையாகும்.
மியான்மர் ஸ்டேட் பேங்க் தனது கிளையை பரப்பும் 37-வது நாடாகும். இவ்வங்கிக்கு உலகம் முழுவதும் 198 அலுவலகங்கள் உள்ளன.

More articles

Latest article