ஆசைக்கு வெட்கமில்லை: 68வயது தாத்தாவை மணம் செய்த 24 வயது பேத்தி!

Must read

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் மியாமி கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு 24 வயது பெண்ணும் 68 வயது ஆணும் திருமணம் செய்திருக்கின்றனர்.
திருமணமாகி 3மாதங்கள் கழித்துதான் அப்பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது தனது கணவர்தான் அப்பாவைப் பெற்ற தாத்தா என்பது!!!
ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அந்த தாத்தாவுக்கு திடீரென்று அதிர்ஷ்ட தேவி கதவைத்தட்ட லாட்டரியில் பல மில்லியன்கள் பரிசு விழுந்துள்ளது. அதற்குப் பிறகு 2015-இல் அவருக்கு புது மனைவி வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கிறது.

ஒரு மேட்ரிமோனி தளத்தில் பெண் தேடியிருக்கிறார். அதில் ஒரு பெண்ணின் முகம் அவரை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் போல தோன்ற இருவரும் சந்தித்து வெகு சீக்கிரத்தில் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணமாகி வாழ்க்கை மிக சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கையில் மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் இருவரும் பழைய போட்டோ ஆல்பங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது தனது கணவர்தான் தனது அப்பாவைப் பெற்ற தாத்தா என்ற அதிர்ச்சிகரமான உண்மை அப்பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது.
ஆனாலும் இருவரும் பிரிய மனமில்லாமல் ஆல்பத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு குடும்ப வாழ்க்கையை தொடர முடிவு செய்துள்ளனர்.

More articles

1 COMMENT

Latest article