ஸ்ரீஹரிகோட்டா:
ந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை இன்சாட்-3டிஆர் செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
1aaainsat 3d
இந்தியாவின் 10-வது ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட்  இதுவாகும். நாளை மாலை 4:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து  ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
1insat 3d 1a-insat 3d
இதற்கான ஏற்பாடுகள் தயாரானதையடுத்து, ஜி.எஸ்.எல்.வி-எப்05 ராக்கெட்டுக்கான 29 மணி நேர கவுண்ட்டவுன், இன்று காலை 11.10 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் தொடங்கிய நிமிடத்தில் இருந்து ராக்கெட்டின் செயல்பாடுகள், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த ராக்கெட்டில் எடுத்துச் செல்லப்படும் செயற்கைகோள் இன்சாட்-3டிஆர் வானிலை தொடர்பான தகவல்களை பெறுவதற்காக அனுப்பப்படுகிறது.
இந்த செயற்கைகோளின் எடை 2211 கிலோ ஆகும். பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.