2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூரத்தி முத்திரைத் தாள் விலை மாற்றத்திற்கான சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

2001 ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் பி மூர்த்தி முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துள்ளதை அடுத்து நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியதை அடுத்து 20 ரூபாயாக இருந்த முத்திரைத நாளின் விலை 200 ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த முத்திரைத்தாளின் விலை 1000 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.